மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர வாகனங்கள் திருட்டு புகார் – அதிகாரிகள் தர்ணா
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு அதிகாரிகள் தர்ணா!
தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாகக் குற்றச்சாட்டு பரபரப்பு! திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து அரசு அதிகாரிகளின் இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாகக் கூறப்படுகிறது.இதனால் பாதிக்கப்பட்ட அரசு அதிகாரிகள், தங்களது வாகனங்களைப் பறிகொடுத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அரசு அலுவலக வளாகத்திலேயே தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக எழுந்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
