சனி, 24 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது!
மாவட்ட செய்திகள், தமிழக செய்திகள், தகவல்கள்

தனியார் வேலைவாய்ப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு வாகனம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

06 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 102 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
தனியார் வேலைவாய்ப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு வாகனம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

தனியார் வேலைவாய்ப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு வாகனம்.

 

அக்.5- திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் வே.நல்லசிவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்திய வாகனம் இயக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினார்.

 

வரும் 10.10.2026 அன்று திருப்பத்தூர் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

 

இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, மருத்துவம், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு கல்வித் தகுதி பெற்றவர்கள் பங்கேற்கலாம்.

 

மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, தொழில் முனைவோருக்கான ஆலோசனை, வங்கிக் கடன் வழிகாட்டுதல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன.

 

தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள இளைஞர்கள் அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

முகாமில் தேர்வு செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு பதிவு எண் ரத்து செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோர் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 04179-222033 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்