வாணியம்பாடியில் டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – கல்லூரி மாணவர் படுகாயம்.
வாணியம்பாடி, செப்.30- பெங்களூரு நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த ரகீப் என்பவரின் மகன் சாத் (22). இவர் வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், கல்லூரி விடுமுறையையொட்டி வண்டலூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வாணியம்பாடி அருகே பெருமாள்பேட்டை பகுதி சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, டிப்பர் லாரி ஒன்று யூ-டர்ன் எடுத்துள்ளது.
அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த சாத், எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சாத் படுகாயமடைந்தார்.
விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள், படுகாயமடைந்த சாதை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாணியம்பாடி நகர போலீசார், விபத்துக்குள்ளான டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், லாரி ஓட்டுநர் அர்ஜுனனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
