சனி, 24 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது!
மாவட்ட செய்திகள், தமிழக செய்திகள்

ஆம்பூர் அருகே +2 மாணவனை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட உம்ராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

06 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 99 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
ஆம்பூர் அருகே +2 மாணவனை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட உம்ராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

ஆம்பூர் அருகே +2 மாணவனை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட உம்ராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

 

அக்.6- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் ஊராட்சிக்குட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் பொதுவழி பயன்பாடு தொடர்பாக மார்க்கபந்து மற்றும் மணிமேகலை ஆகியோரது குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

 

இதுதொடர்பாக இருதரப்பினரும் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

புகாரின் பேரில் போலீசார் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு சென்ற போது மணிமேகலை இல்லாததால் அவரது மகனான பனிரெண்டாம் வகுப்பு மாணவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

 

இதையடுத்து, மாணவனை வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என உமராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் கேட்டதாக புகார் எழுந்துள்ளது.

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

 

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்‌ஷய் அனில் வாக்ரே, முதற்கட்டமாக சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகனை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

 

தொடர்ந்து நடைபெற்ற தீவிர விசாரணையில், அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்‌ஷய் அனில் வாக்ரே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இடத்தகராறு தொடர்பான புகாரில், தாய்க்கு பதிலாக அவரது 12-ம் வகுப்பு படிக்கும் மகனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவரை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்