இடைத்தேர்தல் வெற்றிக்காக ரத்தம் சொட்டிய கால்களுடன் 1008 படிகளை முட்டிபோட்டு ஏறிய தவெக ஒன்றிய செயலாளர்!
இடைத்தேர்தல் வெற்றிக்காக ரத்தம் சொட்டிய கால்களுடன் 1008 படிகளை முட்டிபோட்டு ஏறிய தவெக ஒன்றிய செயலாளர்!
அக்.8- திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே, இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி, அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் 1008 படிக்கட்டுகளை முட்டிபோட்டு ஏறி, மொட்டை அடித்து சிறப்பு பூஜை செய்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த குறளரசன், தமிழக வெற்றி கழகத்தின் நாட்றம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.இந்நிலையில், இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்யபாமா மற்றும் மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகத குமரவேல் ஆகியோர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டுள்ளார்.இதற்காக, நாட்றம்பள்ளி அடுத்த அக்ரகாரம் மலைக்குன்றில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை செய்ய முடிவு செய்த குறளரசன், மலைக்கோயிலுக்கு செல்லும் 1008 படிக்கட்டுகளையும் முட்டிபோட்டு மலை உச்சியை சென்றடைந்த அவர், அங்கு மொட்டை அடித்து ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.மேலும், தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்.அரசியல் வெற்றிக்காக 1008 படிகளை முட்டிபோட்டு ஏறி, மொட்டை அடித்து கடவுளிடம் வேண்டுதல் வைத்த தவெக ஒன்றிய செயலாளரின் இந்த செயல் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
