வாணியம்பாடி அருகே பாலாற்று நீரில் மூழ்கி 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு! விடுமுறையில் நண்பர்களுடன் நீச்சல் பழகச் சென்றபோது சோகம்.
வாணியம்பாடி அருகே பாலாற்று நீரில் மூழ்கி 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு! விடுமுறையில் நண்பர்களுடன் நீச்சல் பழகச் சென்றபோது சோகம்.
வாணியம்பாடி, அக்.20- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சலாமாபாத் பகுதியைச் சேர்ந்தவர் இணையத்தில்லா. இவர் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவரது மகன் அதனான் (15), காதர்பேட்டையில் உள்ள தனியார் அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், பள்ளிக்கு தொடர் விடுமுறை என்பதால், இன்று மதியம் தனது ஐந்து நண்பர்களுடன் இராமாயணதோப்பு பகுதியில் உள்ள பாலாற்றில் தேங்கியிருந்த நீரில் நீச்சல் பழகச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அதனான் நீரில் மூழ்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டுள்ளனர். அவர்களது சத்தத்தைக் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் விரைந்து சென்று நீரில் மூழ்கிய மாணவனை மீட்டு, சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவனின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விடுமுறையில் நண்பர்களுடன் நீச்சல் பழகச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவன் பாலாற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
