ஆம்பூர் அருகே தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் மீண்டும் பதவியேற்க உத்தரவு.
ஆம்பூர் அருகே தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் மீண்டும் பதவியேற்க உத்தரவு.
அக்.7- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, மாவட்ட ஆட்சியரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் காயத்திரி நவீன்குமார், மீண்டும் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் போலியானவை எனக் கூறி, காயத்திரி நவீன்குமார் தரப்பில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் முறையிட்டுள்ளார்.
இந்த நிலையில், தலைமைச் செயலக உத்தரவின் பேரில், தகுதி நீக்கம் தொடர்பான நடவடிக்கையில் மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றுவதற்கு ஊராட்சிகளின் இணை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவராக காயத்திரி நவீன்குமார் மீண்டும் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
