ஞாயிறு, 25 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்!
மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் ஒன்றியத்தில் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 புதிய கட்டடங்கள் – மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்து வைத்தனர்!

16 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 74 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
திருப்பத்தூர் ஒன்றியத்தில் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 புதிய கட்டடங்கள் – மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்து வைத்தனர்!

திருப்பத்தூர் ஒன்றியத்தில் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 புதிய கட்டடங்கள் – மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்து வைத்தனர்!

 

அக்.16- திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் சார்பில், மொத்தம் ரூ.1 கோடியே 88 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 புதிய கட்டடங்களை மாவட்ட ஆட்சியர் வே.நல்லசிவன் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் என். திருப்பதி ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

 

இதில், ஏ.கே.மோட்டூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.29.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம், கொரட்டி நாயனூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2-ன் கீழ் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம், திருப்பத்தூர் நகராட்சியின் 17-வது வார்டில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற சுகாதார நிலையம் உள்ளிட்ட கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

 

மேலும், ஊரகப் பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தொடர்ந்து, கந்திலி வட்டாரம் பெரியகரம் பகுதியில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கொப்பரைத் தேங்காய் உலர்த்தும் மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தமிழரசி, திருப்பத்தூர் நகர்மன்றத் தலைவர் சங்கீதா வெங்கடேசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், பல்வேறு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்