திங்கள், 26 October 2026
⚡ சமீபத்திய
கந்திலி அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்! நோய்த்தொற்று அபாயத்தால் பொதுமக்கள் அவதி. வாணியம்பாடி நகராட்சி அலுவலக நுழைவாயிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி தர்ணா! திருப்பத்தூர் ராமகிருஷ்ணா பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி – ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்! வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து – 18 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி! பேருந்தை பறிமுதல் செய்து கிராமிய போலீசார் விசாரணை. திண்டிவனம் அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி… உடலை ஏரியில் வீசிய விவசாயி கைது! ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்! சுற்றுலாப் பயணிகள் உற்சாகம். ஆம்பூர் அருகே தொடர் கனமழையால் தடுப்பணை நிரம்பி வெள்ளப்பெருக்கு! வாணியம்பாடியில் இசுலாமியா தகவல் மையம் சார்பில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி! இறைவனை நோக்கி மனிதனின் பயணம் என்ற தலைப்பில் சிறப்புரை. வாணியம்பாடியில் மதுபோதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது! வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்! கந்திலி அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்! நோய்த்தொற்று அபாயத்தால் பொதுமக்கள் அவதி. வாணியம்பாடி நகராட்சி அலுவலக நுழைவாயிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி தர்ணா! திருப்பத்தூர் ராமகிருஷ்ணா பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி – ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்! வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து – 18 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி! பேருந்தை பறிமுதல் செய்து கிராமிய போலீசார் விசாரணை. திண்டிவனம் அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி… உடலை ஏரியில் வீசிய விவசாயி கைது! ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்! சுற்றுலாப் பயணிகள் உற்சாகம். ஆம்பூர் அருகே தொடர் கனமழையால் தடுப்பணை நிரம்பி வெள்ளப்பெருக்கு! வாணியம்பாடியில் இசுலாமியா தகவல் மையம் சார்பில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி! இறைவனை நோக்கி மனிதனின் பயணம் என்ற தலைப்பில் சிறப்புரை. வாணியம்பாடியில் மதுபோதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது! வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்!
மாவட்ட செய்திகள்

கந்திலி அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்! நோய்த்தொற்று அபாயத்தால் பொதுமக்கள் அவதி.

26 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 16 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
கந்திலி அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்! நோய்த்தொற்று அபாயத்தால் பொதுமக்கள் அவதி.

கந்திலி அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்! நோய்த்தொற்று அபாயத்தால் பொதுமக்கள் அவதி.

 

அக்.25- திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சுந்தரம்பள்ளி காலனி பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளைச் சுற்றிலும் தேங்கி நிற்கிறது.மேலும், தேங்கியுள்ள கழிவுநீர் வீடுகளுக்குள் புகுவதால், விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், தேங்கிய நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த கழிவுநீர் கால்வாய் அடைக்கப்பட்டதே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் எனக் கூறும் பொதுமக்கள், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.ஆகையால் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்றுவதுடன், அடைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயைச் சீரமைத்து, முறையான கழிவுநீர் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், நோய்த்தொற்று அபாயத்தைத் தடுக்கவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்