வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை.
வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை.
வாணியம்பாடி, அக்.24- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெரிய குரும்பத்தெரு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக, பெரிய குரும்பத்தெரு கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதிலும், வகுப்பறைகளுக்குச் செல்வதிலும் சிரமம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
மேலும், பள்ளி வளாகத்தில் மழை தண்ணீர் தேங்கி நிற்பதால் ஆசிரியர்களும் தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொள்வதில் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் உடனடியாகப் பள்ளி வளாகத்தை நேரில் ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மழைக்காலங்களில் மீண்டும் தண்ணீர் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்தி, பள்ளி வளாகத்தைச் சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும் என முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சதா சிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.
