மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றி: திருச்சிற்றம்பலத்தில் தவெகவினர் கொண்டாட்டம்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றி: திருச்சிற்றம்பலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கொண்டாட்டம்!
வானூர், விழுப்புரம் மாவட்டம்:
தமிழகத்தில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதாகக் கூறப்படும் நிலையில், கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியம் சார்பில் திருச்சிற்றம்பலம் மூன்று முனை சந்திப்பில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தொள்ளாமூர் கண்ணன் தலைமை தாங்கினார். அவர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கபாலி, மாவட்ட இணைச் செயலாளர் ராஜ் பொன்னம்பிள்ளை மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
