திருப்பத்தூர்-ஒப்பந்த-செவிலியர்-பணியிடங்கள்-விண்ணப்பதாரர்களுக்கு-முக்கிய-அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் -செப்டம்பர் -3
திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஒப்பந்த செவிலியர் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டதன் அடிப்படையில், 25.09.2026 அன்று மாலை 5.00 மணி வரை மொத்தம் 1122 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்ததில், சில விண்ணப்பங்களில் SSLC மதிப்பெண் சான்றிதழ், HSC + 2 மதிப்பெண் சான்றிதழ், பட்ட / பட்டயபடிப்பிற்கான (Diploma GNM /B .Sc Nursing) மதிப்பெண் சான்றிதழ் மற்றும் Degree Certificate, Group A (அ) Group B அரசு அலுவலரின் சமீபத்திய நடத்தை சான்றிதழ், கல்வி பயின்ற நிறுவனத்தின் நடத்தை சான்றிதழ், சாதி சான்றிதழ், முகவரிக்கான ஆவணம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களின் நகல்கள் முழுமையாக இணைக்கப்படாமல் இருப்பதும், சில விண்ணப்பதாரர்களின் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் (TamilNadu Nurses and Midwives Council) பதிவு காலாவதியாகி (Expired) இருப்பதும் தெரியவந்துள்ளது.
எனவே, விண்ணப்பத்துடன் இணைக்கப்படாமல் விடுபட்டுள்ள உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை 03.10.2026 அன்று மாலை 6.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பங்களின் நிலை மற்றும் விடுபட்டுள்ள ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களின் விவரங்களை https://tirupathur.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு.வே.நல்லசிவன்.இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
Slug
