சனி, 24 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது!
மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே பாலாறு, கல்லாற்றில் தொடர் மணல் கொள்ளை – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

11 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 75 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
வாணியம்பாடி அருகே பாலாறு, கல்லாற்றில் தொடர் மணல் கொள்ளை – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வாணியம்பாடி அருகே பாலாறு, கல்லாற்றுப் பகுதிகளில் தொடர் மணல் கொள்ளை. – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

 

வாணியம்பாடி, அக்.11- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே பாலாறு மற்றும் கல்லாறு பகுதிகளில், நடுப்பட்டறை, தேங்காய்பட்டறை, ரெட்டியார் தோப்பின் பின்புறம் உள்ளிட்ட இடங்களில் இரவு நேரங்களில் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

 

இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், ஆற்று மணல் வளம் அழிக்கப்படுவதைத் தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இப்பகுதிகளில் இரவு நேரங்களில் நடைபெறும் மணல் கொள்ளை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆறுகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

எனவே, நடுப்பட்டறை, தேங்காய்பட்டறை மற்றும் ரெட்டியார் தோப்பின் பின்புறம் உள்ள பாலாறு, கல்லாற்றுப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும், சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, ஆற்று மணல் வளத்தைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்