பெண்கள் பாதுகாப்பு மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு.
அக்.4- திருப்பத்தூர் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே வழிகாட்டுதலின்பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் பொதுமக்களிடையே பெண்கள் பாதுகாப்பு மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாணியம்பாடி நியூ டவுன் பேருந்து நிலையம், வாணியம்பாடி பேருந்து நிலையம், களத்தூர் கிராமம் மற்றும் சோமநாயக்கன்பட்டி காட்டேரி அம்மன் கோவில் பகுதி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், இணையவழி மோசடிகள், சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைய தொடர்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பெண்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, ஏதேனும் குற்றச்சம்பவங்கள் அல்லது இணையவழி மோசடிகள் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
