ஆம்பூர் அருகே தொடர் கனமழையால் தடுப்பணை நிரம்பி வெள்ளப்பெருக்கு!
ஆம்பூர் அருகே தொடர் கனமழையால் தடுப்பணை நிரம்பி வெள்ளப்பெருக்கு!
அக்.25- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழையால், தடுப்பணை நிரம்பி கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நாயக்கனேரி மலைக்கிராம ஏரி நிரம்பியதைத் தொடர்ந்து, அதிலிருந்து வெளியேறும் உபரிநீர் கிளை ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குறிப்பாக, கம்பிக்கொல்லை பகுதியில் உள்ள ஆனைமதகு தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறி வருவதால், அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பனங்காட்டேரி மலைக்கிராமத்திற்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ள தரைப்பாலம் மூழ்கடித்து வெள்ளநீர் சாலையின் குறுக்கே பெருக்கெடுத்து ஓடுவதால்,
மலைக்கிராமங்களுக்குச் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வெள்ளநீரைக் கடந்து செல்ல வேண்டிய ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
