சனி, 24 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது!
மாவட்ட செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கோரி ஆம்பூரில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

12 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 43 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கோரி ஆம்பூரில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கோரி ஆம்பூரில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

 

 அக்.11- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி, இந்து முன்னணி சார்பில் இந்து அமைப்பினர் கலந்து கொண்டு கண்டன ஆர்பாடத்தில் ஈடுபட்டனர்.

 

ஆம்பூர் இந்து முன்னணி நகர செயலாளர் பிரேம்குமார் தலைமையில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை முந்தைய திமுக அரசு நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டி கண்டன முழக்கங்கள் எழுப்பியும் தற்போதைய தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றி மலை மீது தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

 

இதில், இந்து முன்னணி கோட்டச் செயலாளர்கள் தீனதயாளன், ரவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். முருக பக்தர்கள் முருகன் வேடமணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மேலும், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ரமேஷ் குமரன், கோபி, பாஜக நிர்வாகி அன்பு, இந்து வியாபாரிகள் நலச் சங்க நிர்வாகி ஜெகன், இந்து இளைஞர் முன்னணி நிர்வாகி பரத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாஜக, விஜய் பாரத மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

 

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்