ஞாயிறு, 25 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்!
மாவட்ட செய்திகள்

சென்னாம்பேட்டை பாண்டுரங்கன் ஆலயத்தில் நவராத்திரி விழா கோலாகலம் – கண்கவர் கொலு பொம்மைகள் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

20 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 4 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
சென்னாம்பேட்டை பாண்டுரங்கன் ஆலயத்தில் நவராத்திரி விழா கோலாகலம் – கண்கவர் கொலு பொம்மைகள் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

சென்னாம்பேட்டை பாண்டுரங்கன் ஆலயத்தில் நவராத்திரி விழா கோலாகலம் – கண்கவர் கொலு பொம்மைகள் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

 

வாணியம்பாடி, அக்.19- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சென்னாம்பேட்டை பகுதியில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள பழமையான பாண்டுரங்கன் ஆலயத்தில் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

 

பண்டரிபுரத்திற்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்ற தலமாகக் கருதப்படும் இந்த ஆலயத்தில், நவராத்திரி விழாவை முன்னிட்டு பல்வேறு புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் இந்து சமய வரலாற்றை விளக்கும் வகையில் நூற்றுக்கணக்கான கொலு பொம்மைகள் அழகுற அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

 

இதில், மகாவிஷ்ணுவின் மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், பலராமர், ராமர், கிருஷ்ணர் மற்றும் கல்கி என பத்து அவதாரங்களையும் விளக்கும் தசாவதாரக் கொலு பொம்மைகள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

 

மேலும், விநாயகரின் பல்வேறு திருக்கோலங்கள், சப்த கன்னிமார்கள், கிருஷ்ணரின் குழந்தைப் பருவ லீலைகள், ராமாயணக் காட்சிகள், குருகுலப் பயிற்சி, சேது பாலம், அசோகவனம், ராவணன் தர்பார் உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

அதேபோல், 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் வரலாறு, திருவிளையாடல் புராணக் காட்சிகள், மார்க்கண்டேயர், ஊர்த்துவ தாண்டவம் ஆடும் நடராஜர், கைலாயம், திருப்பாற்கடல், நக்கீரர் வழக்கு உள்ளிட்ட ஆன்மிகச் சிறப்புமிக்க நிகழ்வுகளும் கொலுவில் இடம்பெற்றுள்ளன.

 

இதுதவிர, முருகப்பெருமானின் அறுபடை வீடுகள், பூரி ஜெகந்நாதர் கோவில், துவாரகையில் கிருஷ்ணரின் லீலைகள், சபரிமலை ஐயப்பன் வரலாறு, ஆதிசங்கரர், அபிராமி பட்டர், பாண்டுரங்கனின் பண்டரிபுர விழா உள்ளிட்ட பல்வேறு ஆன்மிகக் காட்சிகளும் பக்தர்களை வெகுவாகக் கவர்கின்றன.

 

மேலும், திருமணம் முதல் சீமந்தம் வரையிலான பாரம்பரிய சடங்குகள், சுமங்கலி பூஜை, கார்த்திகைப் பெண்கள், பரீட்சித் மகாராஜாவின் அரியணைக் காட்சி மற்றும் சத்யநாராயண பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களும் கொலுவில் இடம்பெற்றுள்ளன.

 

இவ்வாறு புராணங்கள், இதிகாசங்கள், ஆன்மிக வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளதாகப் பக்தர்கள் தெரிவித்தனர்.

 

நவராத்திரி விழாவையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து பாண்டுரங்கனை வழிபடுவதுடன், கண்கவர் கொலு பொம்மைகளையும் கண்டு ரசித்து வருகின்றனர்.

 

சென்னாம்பேட்டை பாண்டுரங்கன் ஆலயத்தில் நடைபெற்று வரும் இந்த நவராத்திரி விழா, அப்பகுதியில் ஆன்மிக உற்சாகத்தையும் பக்திப் பரவசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்