ஞாயிறு, 25 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்!
மாவட்ட செய்திகள்

ஆம்பூரில் கிராவல் மண் ஏற்றிச் சென்ற லாரியைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம். சாலைகள் சேதமடைவதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் புகார்!

13 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 78 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
ஆம்பூரில் கிராவல் மண் ஏற்றிச் சென்ற லாரியைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம். சாலைகள் சேதமடைவதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் புகார்!

ஆம்பூரில் கிராவல் மண் ஏற்றிச் சென்ற லாரியைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம். சாலைகள் சேதமடைவதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் புகார்!

 

அக்.13- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கம்பிகொல்லை பகுதியில் உள்ள தனியார் மண் குவாரியில் இருந்து கிராவல் மண் ஏற்றிச் சென்ற லாரியைச் சிறைபிடித்து, அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட கம்பிகொல்லை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் மண் குவாரி இயங்கி வருகிறது. இந்தக் குவாரியில் இருந்து தினந்தோறும் ஏராளமான லாரிகள் மூலம் அதிக அளவில் கிராவல் மண் எடுத்துச் செல்லப்படு வருகிறது.

 

இதனால், அப்பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளதாகவும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டிய பொதுமக்கள், குவாரியில் இருந்து கிராவல் மண் ஏற்றிச் சென்ற லாரியைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் நாகலிங்கம் மற்றும் வருவாய்த் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

 

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்