திருப்பத்தூரில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் வட்ட பொதுக்குழு
திருப்பத்தூரில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் வட்ட பொதுக்குழு
திருப்பத்தூர் மாவட்டம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கத்தின் வட்ட பொதுக்குழு வட்டத் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த பொதுக்குழுவில் 2009இல் பணியேற்பு செய்த ஐடிஐ படித்த பணியாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி நிலுவைத்தொகை பெற்று வழங்கிட வேண்டும். களப்பணியில் உள்ள காலி பணியிடங்களை தகுதியின் அடிப்படையில் உடனே நிரப்பிட வேண்டும். வாரிய ஆணை எண்.2 ரத்து செய்யவேண்டும். தொழிற்சங்கங்களுக்கு எதிரான புதிய தொழிலாளர் நலச் சட்டங்களை கைவிட வேண்டும். மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். விபத்து நிகழாமல் தவிர்த்திட களப்பணியாளர்கள் அனைவருக்கும் முக்கியமான கருவித் தொகுப்பு மற்றும் தரமான தளவாடப் பொருட்கள் வழங்கிட வேண்டும். ஜெய் கிரேடு காலி பணியிடங்களை பணியாளர்களை கொண்டு நிரப்பிட வேண்டும் அதன் முரண்பாடுகளை நீக்கிட வேண்டும். விபத்துக்கள் நிகழாமல் தவித்திட தரமான தளவாட பொருட்களை வழங்கிட வேண்டும். ஏலகிரி மலை காவலூர் புதூர் நாடு துணை மின் நிலையம் பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அலோவன்ஸ் வழங்கிடுக. உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த பொது குழுவில் நிறைவேற்றப்பட்டது. மாநிலத் தலைவர் கண்ணன் மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியம் மாநில பொருளாளர் முத்துசாமி மாநில அமைப்பு செயலாளர் வீராசாமி மாநில மகளிர் அணி தலைவி கலைவாணி முன்னாள் மண்டல செயலாளர் சிவராஜ் மாநிலத் துணைத் தலைவர் கிரிதரன் மாநில செயலாளர் கோடீஸ்வரர் தேசாய் மாநில துணைத்தலைவர் கருப்புசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர் இறுதியாக திருப்பத்தூர் கோட்டை செயலாளர் அருஸ்தாஸ் நன்றி கூறினார்
