நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி!
நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி!
அக்.24- திருப்பத்தூர் மாவட்டம், கே. பந்தாரபள்ளி குள்ளன்வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவர் நேற்று காலை தனது நான்காம் வகுப்பு படிக்கும் பேரனை அரசு பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.அப்போது, ரயில்வே தண்டவாளம் அருகே வள்ளியம்மாள் சென்றுகொண்டிருந்ததை நோட்டமிட்டு அவரது உறவினர் பழனி, போதையில் இருந்த நிலையில், மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க நகையைப் பறிக்க அவரை கீழே தள்ளிவிட்டு, கட்டையால் தாக்கி, அவரது கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துக்கொண்டு பழனி அங்கிருந்து தப்பிச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த வள்ளியம்மாளை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பட்டப்பகலில், மூதாட்டியைத் தாக்கி நகை பறித்துச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம், அதிலும் உறவினர் மீதே புகார் எழுந்திருப்பது, நாட்றம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
