ஞாயிறு, 25 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்!
மாவட்ட செய்திகள்

நாட்றம்பள்ளி அருகே அரசு நிலம் எனக் கூறி விதவைப் பெண் கட்டிய வீட்டை ஜேசிபி மூலம் இடித்து அகற்றிய வட்டாட்சியர்.

22 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 10 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
நாட்றம்பள்ளி அருகே அரசு நிலம் எனக் கூறி விதவைப் பெண் கட்டிய வீட்டை ஜேசிபி மூலம் இடித்து அகற்றிய வட்டாட்சியர்.

நாட்றம்பள்ளி அருகே அரசு நிலம் எனக் கூறி விதவைப் பெண் கட்டிய வீட்டை ஜேசிபி மூலம் இடித்து அகற்றிய வட்டாட்சியர்.

இரண்டு பெண் குழந்தைகளுடன் நிர்க்கதியாகத் தவிக்கும் கணவனை இழந்த பெண்– மாவட்ட நிர்வாகம் உதவுமா?

 

அக்.21- திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே சொரக்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கிணற்றுக் கொல்லை பகுதியில் வசித்து வருபவர் சம்பூர்ணம். இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இரண்டு பெண் குழந்தைகளுடன் அரசு புறம்போக்கு இடத்தில் குடிசை கட்டி வசித்து வந்துள்ளார்.இந்நிலையில், குடிசை வீடு சேதமடைந்ததுடன், விஷப்பூச்சிகளின் அச்சுறுத்தலும் இருந்ததால் தனது குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பல்வேறு இடங்களில் கடன் பெற்று புதிய வீடு கட்டும் பணியில் சம்பூர்ணம் ஈடுபட்டு வந்துள்ளார்.இதற்கிடையே, அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது எனக் கூறி, நாட்றம்பள்ளி வட்டாட்சியர் கௌரிசங்கர் சம்பவ இடத்திற்குச் சென்று, சம்பூர்ணம் குடும்பத்தினருக்கு எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், இன்று அதிகாலை ஜேசிபி இயந்திரம் மூலம் சம்பூர்ணம் கட்டி வந்த வீட்டை இடித்து தள்ளியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த சம்பூர்ணம், தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்.

 

கணவரை இழந்து, கடன் பெற்று தனது குழந்தைகளுக்காகப் பாதுகாப்பான வீட்டைக் கட்ட முயன்ற பெண்ணின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, சம்பூர்ணத்தின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, அவருக்கு அரசு சார்பில் இலவச வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.சம்பவம் குறித்து நாற்றம்பள்ளி வட்டாட்சியரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறியதாவது.என்னுடைய கடமை நான் செய்து இருக்கிறேன்.முறையாக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று தான் நடவடிக்கை எடுத்துள்ளேன் என்று பதிலளித்துள்ளார்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்