சனி, 24 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது!
மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

14 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 8 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

 

அக்.14- திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெலக்கல்நத்தம் ஊராட்சியில், பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வே.நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

வெலக்கல்நத்தம் ஊராட்சியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் வசதி, திடக்கழிவு மேலாண்மை, சுகாதார வசதிகள் மற்றும் கிராம இணைப்புச் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

 

தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், மாணவர்களின் வருகைப் பதிவு, கல்வித் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டார். மேலும், மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

 

அங்கன்வாடி மையத்திலும் ஆய்வு மேற்கொண்ட அவர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவின் தரம், குழந்தைகளின் வருகை, பராமரிப்பு மற்றும் சுகாதார வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

 

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.5.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கற்றல் கற்பித்தல் மையக் கட்டிடப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். கட்டிடத்தின் அடித்தளப் பணிகள் நிறைவடைந்துள்ளதையும், தூண்கள் அமைக்கப்பட்டு லிண்டல் மட்டத்திற்கு உயர்த்தும் பணிகள் மற்றும் செங்கல் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு, கட்டுமானப் பணிகளைத் தரமாகவும் விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

 

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தமிழரசி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் எஸ்.அருணாசலம், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெ.மணவாளன், ரஷாத் பாஷா மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் ராமசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்