ஞாயிறு, 25 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் கவாத்துப் பயிற்சி – எஸ்.பி. நேரில் ஆய்வு! முதல்வர் அண்ணா, எனக்கு உதவி செய்யுங்கள் – மருத்துவக் கனவை நனவாக்க ரூ.8 லட்சம் தேவை! ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்!
மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

22 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 48 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
வாணியம்பாடி வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

வாணியம்பாடி வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

 

21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

 

வாணியம்பாடி, அக்.22- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் வே. நல்லசிவன் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

 

தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அரசு சேவைகள் பொதுமக்களுக்கு தடையின்றி சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், வாணியம்பாடி வட்டத்தில் இன்று முதல் நாள் ஆய்வுப் பணிகள் நடைபெற்றது.

 

இதன் ஒரு பகுதியாக, வாணியம்பாடி நகராட்சி உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், தேவையற்ற குப்பைகளை உடனடியாக அகற்றி தூய்மையைப் பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

 

மேலும், வாரச்சந்தை பகுதியில் சுமார் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் உழவர் சந்தை மேம்பாட்டுப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

 

தொடர்ந்து, வாணியம்பாடி பகுதியில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையம், நகராட்சி தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, அம்மா உணவகம் மற்றும் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். அப்போது, பொதுமக்களுக்கு தரமான உணவு வழங்குதல், மருத்துவச் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் தூய்மையைப் பராமரித்தல் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

 

வாணியம்பாடி நகரில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால் மேம்பாட்டுப் பணிகளையும் ஆய்வு செய்தார். இந்தப் பணிகள் நிறைவடைந்தால் சுமார் ஒன்றரை லட்சம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

மேலும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வணிக வளாகப் பணிகள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையப் பணிகளையும் ஆய்வு செய்தார். பணிகளைத் தரமாகவும் விரைவாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

இதனைத் தொடர்ந்து, வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம், ஆதார் மற்றும் இ-சேவை மையம், நகராட்சி பள்ளி சத்துணவுக் கூடம் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

 

பின்னர், வாணியம்பாடி வட்டார வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர், கள ஆய்வின்போது கண்டறியப்படும் குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்து, நிலுவையில் உள்ள பணிகளைத் தாமதமின்றி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

 

தொடர்ந்து, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. ஃபாரூக் பாஷா அவர்களுடன் இணைந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாகப் பெற்றுக்கொண்டார். பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

 

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில், இயற்கை மரண நிவாரணம், குடும்ப அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களின் கீழ், மொத்தம் 21 பயனாளிகளுக்கு 3 லட்சத்து 19 ஆயிரத்து 345 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வே. நல்லசிவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. ஃபாரூக் பாஷா ஆகியோர் வழங்கினர்.

 

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா. பாலசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தமிழரசி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், வாணியம்பாடி வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரின் ஆய்வுப் பணிகள் நடைபெற்றது.

 

Seo

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்