சனி, 24 October 2026
⚡ சமீபத்திய
ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? ஆம்பூரில் டீக்கடை தொழிலாளியின் மனைவிக்கு ரூ. 2 கோடி 38 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை! நாட்றம்பள்ளி அருகே மூதாட்டியிடம் 2 சவரன் தங்க நகை பறிப்பு! படுகாயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா?
மாவட்ட செய்திகள்

திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

24 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 23 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பத்தூரில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் மீது சாய்ந்த புளிய மரம்– மின்கம்பமும் சேதம்! ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

 

அக்.24- திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பகுதியில் புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து வீடுகள் மற்றும் சாலைகளின் மீது விழுந்துள்ளன. மேலும், மின்கம்பமும் சேதமடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

இந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தொடர் மழையின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், மரக்கிளைகள் சாலைகளில் விழுந்து போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. மேலும், மின்கம்பம் மற்றும் மின் கம்பிகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்ததை தொடர்ந்து,

 

தீயணைப்புத் துறையினர், நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மின்சாரத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சாலையில் விழுந்த மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

 

மேலும் வீடுகளின் மீது சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு மரங்களும், சேதமடைந்த மின் மின் கம்பங்களால் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.எனவே, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு மரங்களையும் உடனடியாக அகற்றவும், சேதமடைந்த மின்கம்பத்தைச் சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்