மாவட்ட செய்திகள்
வாணியம்பாடியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி சுமார் 100 பேர் த.வெ.க.வில் இணைந்தனர்!
வாணியம்பாடியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி சுமார் 100 பேர் த.வெ.க.வில் இணைந்தனர்!
வாணியம்பாடி, அக்.11- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி புதூர் பைபாஸ் சாலையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 100 பேர்
எம்.திருமூர்த்தி, டி.சந்தோஷ், ஹரி, சதீஷ், குபேந்திரன், தினேஷ்
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
மாவட்டச் செயலாளர் நவீன்குமார் மற்றும் ஆலங்காயம் வடக்கு ஒன்றியச் செயலாளர் எழிலரசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் நவீன்குமார் கட்சித் துண்டுகளை அணிவித்து வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
