ஆம்பூர் அருகே பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது – வாணியம்பாடி கிளைச் சிறையில் அடைத்தனர்.
ஆம்பூர் அருகே பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது – வாணியம்பாடி கிளைச் சிறையில் அடைத்தனர்.
அக்.13- திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் கார்த்திகேயன் (25), தனது செல்போன் மூலம் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து, அவற்றை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரீல்ஸாக வெளியிட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த கௌரி என்பவர் அளித்த புகாரின் பேரில், ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீசார் கார்த்திகேயனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவரது செல்போனை ஆய்வு செய்ததில், பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, கார்த்திகேயன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வாணியம்பாடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
