சனி, 24 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது!
மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

23 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 12 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

 

வாணியம்பாடி, அக்.23- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாளாக மாவட்ட ஆட்சியர் வே. நல்லசிவன், பல்வேறு இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

 

இதன் ஒரு பகுதியாக, வாணியம்பாடி பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், பள்ளியின் சமையலறையைப் பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை ஆய்வு செய்தார்.

 

தொடர்ந்து, பள்ளியில் உள்ள கழிப்பறைகள், வகுப்பறைகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ததுடன், மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் குறைகள் மற்றும் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

 

இதனைத் தொடர்ந்து, வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகள் மற்றும் சாலைப் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், சேதமடைந்த சாலைகளை உடனடியாகச் சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

 

மேலும், சாலையோரக் கடைகளில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகளை ஆய்வு செய்த அவர், அவற்றை உடனடியாக அகற்ற நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்த மாவட்ட ஆட்சியர், கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாகச் சேகரித்து, தூய்மைப் பணியாளர்கள் வரும்போது அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

இந்த ஆய்வின்போது, மாவட்ட சுகாதார அலுவலர் தாமரைமணாளன், வாணியம்பாடி நகராட்சி பொறியாளர் சந்திரசேகர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்