சனி, 24 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது!
மாவட்ட செய்திகள்

ஆம்பூரில் நள்ளிரவு தனியார் காலணி குடோனில் பயங்கர தீ விபத்து. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பல்.

02 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 68 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
ஆம்பூரில் நள்ளிரவு தனியார் காலணி குடோனில் பயங்கர தீ விபத்து. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பல்.

அக்.2- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான காலணி கடை மற்றும் குடோனில் நள்ளிர ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான காலணிகள், ரப்பர், தோல் மற்றும் மூலப்பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

 

ஆம்பூர் நேதாஜி சாலை பகுதியில் ஜூனேத் என்பவருக்கு சொந்தமான காலணி கடை மற்றும் சேமிப்புக் கிடங்கு இயங்கி வருகிறது. நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்தத பின்னர் கடை மற்றும் குடோனை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

 

அதிகாலை குடோனில் இருந்து கரும்புகை வெளியேறுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

குடோனில் காலணிகள், ரப்பர், தோல், சோல் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அதிகளவில் வைக்கப்பட்டிருந்ததால், தீ வேகமாக பரவியது.

 

மேலும் குடோன் முழுவதும் புகை மூட்டமாக இருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு துறையினர் விடிய விடிய போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான காலணிகள், உதிரிபாகங்கள் மற்றும் மூலப்பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

 

சம்பவம் குறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

நள்ளிரவில் தனியார் காலணி குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்