ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து. பசம்பவ இடத்தில் விவசாயி உயிரிழப்பு!
ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து. பசம்பவ இடத்தில் விவசாயி உயிரிழப்பு!
அக்.21- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, இருசக்கர வாகனத்தின் மீது எம்-சாண்ட் ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கௌரிபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் (67), மாதனூரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருமலைக்குப்பம் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது பின்னால் எம்-சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி, அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய லாரியைப் பறிமுதல் செய்தனர். பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்த லாரி ஓட்டுநரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்பூர் அருகே லாரி மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
