சனி, 24 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது! திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – Google Pay மூலம் ரூ.1 லட்சம் விவகாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! வாணியம்பாடி அருகே ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி! அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு ஆம்பூர் அருகே சாலையோரக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டைகள்! வாணியம்பாடி அருகே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! சாலையோரத்தில் விற்பனைக்கு வந்த பிரண்டை! மறந்து போன பாரம்பரிய உணவுக்கு ஆதரவு தருவோமா? வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை! வாணியம்பாடி அருகே 21 பயனாளிகளுக்கு ரூ.3.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்! ஆந்திர வனப்பகுதியில் கணவரைக் கொன்று புதைத்த வழக்கு: மனைவி, கள்ளக்காதலன் கைது!
மாவட்ட செய்திகள்

வாணியம்பாடியில் நகராட்சி சாலையை அனுமதியின்றி இயந்திரம் மூலம் வெட்டிச் சேதம்

18 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 49 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
வாணியம்பாடியில் நகராட்சி சாலையை அனுமதியின்றி இயந்திரம் மூலம் வெட்டிச் சேதம்

வாணியம்பாடியில் நகராட்சி சாலையை அனுமதியின்றி இயந்திரம் மூலம் வெட்டிச் சேதம்.

 

சாதாரண மக்களிடம் சாலை சேதக் கட்டணம் வசூலிக்கும் நகராட்சி நிர்வாகம், விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்குமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி.

 

வாணியம்பாடி, அக்.18- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முகமது அலி பஜார் பகுதியில், நகராட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றி வணிகர் ஒருவர் தனது சொந்த பயன்பாட்டிற்காக இயந்திரம் மூலம் சாலையை வெட்டிச் சேதப்படுத்தியுள்ளார்.

 

வாணியம்பாடி நகராட்சியின் சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாலையை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் நகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல், அவசர அவசரமாக ட்ரில் இயந்திரம் மூலம் வெட்டி வருகிறார்.

 

இதனால் நகராட்சி சாலை சேதமடைந்ததுடன், அப்பகுதியில் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

 

பொதுமக்கள் நகராட்சியில் குடிநீர் குழாய் இணைப்பு கோரும்போது, சாலையைச் சீரமைப்பதற்கான கட்டணமாக ரோடு டேமேஜ் சார்ஜஸ் வசூலிக்கப்படும் நிலையில், நகராட்சி அனுமதியின்றி சாலையைச் சேதப்படுத்துவோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

எனவே, நகராட்சி சாலைகள் மற்றும் குடிநீர் குழாய்களைச் சேதப்படுத்துவோர் மீது உரிய விசாரணை நடத்தி, விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த சாலையைச் சீரமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

சட்டவிரோதமாகச் சாலையைச் சேதப்படுத்தியதாக எழுந்துள்ள புகார் மீது வாணியம்பாடி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்