திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்.
அக்.12- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வே. நல்லசிவன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சித்துறை, வனத்துறை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, கூட்டுறவுக் கடனுதவி, மின்துறை, மருத்துவத்துறை, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 585 மனுக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியர், மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சக்கர நாற்காலிகளும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 6 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரங்களும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு 11 ஆயிரத்து 445 ரூபாய் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளும் என மொத்தம் 5 பயனாளிகளுக்கு 40 ஆயிரத்து 445 ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
