மாவட்ட செய்திகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கிய 26-வது வார்டு உறுப்பினர்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கிய 26-வது வார்டு உறுப்பினர்!
வாணியம்பாடி, நவ.7- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 26-வது வார்டு உறுப்பினர் பி. இக்பால் அஹ்மத், இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனது வார்டு பகுதியில் பணியாற்றும் 7 தூய்மைப் பணியாளர்களுக்கு இலவசமாக வேட்டி மற்றும் சேலைகளை வழங்கிச் சிறப்பித்தார்.தூய்மைப் பணியாளர்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பணியாளர்களுக்கு அவர் தனது தீபாவளி வாழ்த்துகளையும் அன்போடு தெரிவித்துக் கொண்டார்.நகரமன்ற உறுப்பினரின் இந்தச் செயலை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
