திங்கள், 26 October 2026
⚡ சமீபத்திய
கந்திலி அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்! நோய்த்தொற்று அபாயத்தால் பொதுமக்கள் அவதி. வாணியம்பாடி நகராட்சி அலுவலக நுழைவாயிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி தர்ணா! திருப்பத்தூர் ராமகிருஷ்ணா பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி – ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்! வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து – 18 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி! பேருந்தை பறிமுதல் செய்து கிராமிய போலீசார் விசாரணை. திண்டிவனம் அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி… உடலை ஏரியில் வீசிய விவசாயி கைது! ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்! சுற்றுலாப் பயணிகள் உற்சாகம். ஆம்பூர் அருகே தொடர் கனமழையால் தடுப்பணை நிரம்பி வெள்ளப்பெருக்கு! வாணியம்பாடியில் இசுலாமியா தகவல் மையம் சார்பில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி! இறைவனை நோக்கி மனிதனின் பயணம் என்ற தலைப்பில் சிறப்புரை. வாணியம்பாடியில் மதுபோதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது! வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்! கந்திலி அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்! நோய்த்தொற்று அபாயத்தால் பொதுமக்கள் அவதி. வாணியம்பாடி நகராட்சி அலுவலக நுழைவாயிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி தர்ணா! திருப்பத்தூர் ராமகிருஷ்ணா பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி – ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்! வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து – 18 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி! பேருந்தை பறிமுதல் செய்து கிராமிய போலீசார் விசாரணை. திண்டிவனம் அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி… உடலை ஏரியில் வீசிய விவசாயி கைது! ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்! சுற்றுலாப் பயணிகள் உற்சாகம். ஆம்பூர் அருகே தொடர் கனமழையால் தடுப்பணை நிரம்பி வெள்ளப்பெருக்கு! வாணியம்பாடியில் இசுலாமியா தகவல் மையம் சார்பில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி! இறைவனை நோக்கி மனிதனின் பயணம் என்ற தலைப்பில் சிறப்புரை. வாணியம்பாடியில் மதுபோதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது! வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்!
அறிவியல் தகவல் தொழில்நுட்ப, மாவட்ட செய்திகள், விளையாட்டு

திருப்பத்தூர் ராமகிருஷ்ணா பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி – ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்!

26 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 7 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
திருப்பத்தூர் ராமகிருஷ்ணா பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி – ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்!

திருப்பத்தூர் ராமகிருஷ்ணா பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி – ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்!

 

அக்.26- திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர் எழுச்சி நாளையொட்டி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

 

கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் வே. நல்லசிவன் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் என்.திருப்தி ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

 

கண்காட்சியில், மாணவர்கள் தங்களது அறிவியல் திறன்களையும், புதுமையான கண்டுபிடிப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

 

குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட நவீன சாதனங்கள், பயணத்தின்போது தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், கதவுகளில் குழந்தைகளின் கைகள் சிக்காமல் தடுக்கும் பாதுகாப்பு அமைப்புகள், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களின் தரத்தை கண்டறியும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது .மேலும், அன்றாட வாழ்க்கையில் பயன்படும் வகையிலான தானியங்கி இயந்திரங்கள், உணவை வீணாக்காமல் தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ள உதவும் அமைப்புகள், சாலைகளில் விபத்துகளைத் தடுக்கும் தொழில்நுட்பங்கள், மழை பெய்யும்போது தானாக இயங்கும் மழை உணரிகள் மற்றும் துணிகளை மழையில் நனையாமல் பாதுகாக்கும் தானியங்கி உலர்த்தும் அமைப்புகள் போன்ற பல்வேறு படைப்புகளும் இடம்பெற்றிருந்தன.பொதுமக்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் குறைந்த செலவில் பயனுள்ள கண்டுபிடிப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.கண்காட்சியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு மாணவரின் அறிவியல் படைப்புகளையும் பார்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 40 பள்ளிகளிலிருந்து 74 மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளுடன் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.அப்துல் கலாம் அறிவியல் கனவுகளை மாணவர்களிடம் வளர்க்கும் நோக்கில் நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சி, மாணவர்களின் புதுமையான சிந்தனைகளையும் அறிவியல் ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்