காக்கங்கரையில் தமிழக வெற்றிக் கழக ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா – எம்எல்ஏ டாக்டர் என். திருப்பதி பங்கேற்பு!
காக்கங்கரையில் தமிழக வெற்றிக் கழக ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா – எம்எல்ஏ டாக்டர் என். திருப்பதி பங்கேற்பு!
காக்கங்கரை, அக். 19:
திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், திருப்பத்தூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகச் செயலாளரும், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் என். திருப்பதி கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
காக்கங்கரை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலைக்கு டாக்டர் என். திருப்பதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, காலை 9.30 மணியளவில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு கந்திலி மத்திய ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். பிரபு தலைமை தாங்கினார். ஒன்றிய இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், கந்திலி கிழக்கு ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் சரவணன் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
