ஏலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு காவல்துறையினர் விழிப்புணர்வு – பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அறிவுரை!
ஏலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு காவல்துறையினர் விழிப்புணர்வு!
ஜோலார்பேட்டை- நவ.9- திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, இணையவழிக் குற்றத் தடுப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே உத்தரவின்பேரில், ஏலகிரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாரதி தலைமையிலான போலீசார், ஏலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, காவலன் செயலியின் பயன்பாடு, இணையவழிக் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை நாடுவது மற்றும் தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது குறித்து விளக்கினர்.
மேலும், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான முறையில் சுற்றுலாவை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
ஏலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
