சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கிய 26-வது வார்டு உறுப்பினர்! திருப்பத்தூர் அருகே பெயிண்ட் கடையில் பயங்கர தீ விபத்து – ரூ.75 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்! ஆம்பூர் அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்த கார் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது வாணியம்பாடியில் மின்சாரம் தாக்கி வெளிநாட்டு தொழிலாளி பலி – இரும்புக் கம்பியால் கழிவுநீர் அடைப்பைச் சரிசெய்ய முயன்றபோது சோகம்! ஓசூர் அருகே தனியார் தொழிற்சாலையில் கான்கிரீட் ஆர்ச் சரிந்து விபத்து – 3 தொழிலாளர்கள் பலி! திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் – சகோதரர் உட்பட 2 பேர் கைது! வாணியம்பாடி அருகே இடி, மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி – பெண் படுகாயம்! ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ரூ.1.75 கோடி வளர்ச்சிப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு பெருந்துறை நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பிய முதல்வர் விஜய் – கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு! ஆம்பூரில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து கௌரவிப்பு! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கிய 26-வது வார்டு உறுப்பினர்! திருப்பத்தூர் அருகே பெயிண்ட் கடையில் பயங்கர தீ விபத்து – ரூ.75 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்! ஆம்பூர் அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்த கார் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது வாணியம்பாடியில் மின்சாரம் தாக்கி வெளிநாட்டு தொழிலாளி பலி – இரும்புக் கம்பியால் கழிவுநீர் அடைப்பைச் சரிசெய்ய முயன்றபோது சோகம்! ஓசூர் அருகே தனியார் தொழிற்சாலையில் கான்கிரீட் ஆர்ச் சரிந்து விபத்து – 3 தொழிலாளர்கள் பலி! திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் – சகோதரர் உட்பட 2 பேர் கைது! வாணியம்பாடி அருகே இடி, மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி – பெண் படுகாயம்! ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ரூ.1.75 கோடி வளர்ச்சிப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு பெருந்துறை நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பிய முதல்வர் விஜய் – கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு! ஆம்பூரில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து கௌரவிப்பு!
மாவட்ட செய்திகள், தமிழக செய்திகள்

திருப்பத்தூர் அருகே பெயிண்ட் கடையில் பயங்கர தீ விபத்து – ரூ.75 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்!

07 நவம்பர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 37 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
திருப்பத்தூர் அருகே பெயிண்ட் கடையில் பயங்கர தீ விபத்து – ரூ.75 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்!

திருப்பத்தூர் அருகே பெயிண்ட் கடையில் பயங்கர தீ விபத்து – ரூ.75 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்!

 

நவ.7- திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, நள்ளிரவில் பெயிண்ட் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான பெயிண்ட் மற்றும் இதர பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

 

ஜோலார்பேட்டை அடுத்த மேல்அச்சமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (56) என்பவர், பாச்சல் கிராம மேம்பாலத்தின் கீழ் விஷ்ணு பிரியா சிமெண்ட் மற்றும் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார்.

இந்தக் கடையில் பெயிண்டுகள், சிமெண்ட் மூட்டைகள், சுண்ணாம்பு, டைல்ஸ் ஒட்டுவதற்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் பெயிண்ட் கலக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இருப்பு வைத்திருந்தார்.

இந்நிலையில், நள்ளிரவில் கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றியுள்ளது. கடையில் இருந்த பெயிண்டுகள் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கின.

இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர், உடனடியாக திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

தகவலின்பேரில் நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும், கடையில் இருந்த சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான பெயிண்டுகள் மற்றும் இதர பொருட்கள் தீயில் எரிந்து முற்றிலும் நாசமாகின.

சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்