வெள்ளி, 06 November 2026
⚡ சமீபத்திய
ஓசூர் அருகே தனியார் தொழிற்சாலையில் கான்கிரீட் ஆர்ச் சரிந்து விபத்து – 3 தொழிலாளர்கள் பலி! திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் – சகோதரர் உட்பட 2 பேர் கைது! வாணியம்பாடி அருகே இடி, மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி – பெண் படுகாயம்! ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ரூ.1.75 கோடி வளர்ச்சிப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு பெருந்துறை நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பிய முதல்வர் விஜய் – கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு! ஆம்பூரில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து கௌரவிப்பு! சிங்கிள்ஸுக்கு இலவசமாக பின்லாந்து சுற்றுலா! காதல் விருந்துக்கு 16 பேருக்கு அழைப்பு – நவம்பர் 10 கடைசி நாள்! வாணியம்பாடி அருகே கல்லறைத் திருநாள் – கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு! ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு, தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு ஓசூர் அருகே தனியார் தொழிற்சாலையில் கான்கிரீட் ஆர்ச் சரிந்து விபத்து – 3 தொழிலாளர்கள் பலி! திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் – சகோதரர் உட்பட 2 பேர் கைது! வாணியம்பாடி அருகே இடி, மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி – பெண் படுகாயம்! ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ரூ.1.75 கோடி வளர்ச்சிப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு பெருந்துறை நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பிய முதல்வர் விஜய் – கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு! ஆம்பூரில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து கௌரவிப்பு! சிங்கிள்ஸுக்கு இலவசமாக பின்லாந்து சுற்றுலா! காதல் விருந்துக்கு 16 பேருக்கு அழைப்பு – நவம்பர் 10 கடைசி நாள்! வாணியம்பாடி அருகே கல்லறைத் திருநாள் – கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு! ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு, தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் – சகோதரர் உட்பட 2 பேர் கைது!

06 நவம்பர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 34 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் – சகோதரர் உட்பட 2 பேர் கைது!

திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் – சகோதரர் உட்பட 2 பேர் கைது!

 

நவ.5- திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கொரட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு கோபி, திலகப்பிரியா என ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

 

இந்நிலையில், தனது சகோதரி திலகப்பிரியாவுக்கு வீட்டை அவரது பெயருக்கு மாற்றித் தருவதாகக் கூறி, கோபி அவரை சில மாதங்களுக்கு முன்பு புலிக்குட்டை பகுதியில் செயல்பட்டு வரும் திருப்பத்தூர் எண் 2 இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

 

அப்போது, திலகப்பிரியாவுக்குத் தெரியாமலேயே அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் 4 ஏக்கர் நிலத்தை தமிழரசன் என்பவருக்கு சுத்த கிரயம் செய்து கொடுத்ததாகத் தெரிகிறது.

 

இதனை அறிந்த திலகப்பிரியா, சம்பவம் தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கக் கோரி மனு அளித்துள்ளார்.

 

இதற்காக திலகப்பிரியாவின் கணவர் தாமோதரன் மற்றும் மகன் யோகேஸ்வரன் ஆகிய இருவரும் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர்.

 

இதனை அறிந்த கோபி மற்றும் அவரது நண்பர்களான லட்சுமணன், ராஜசேகர், சிலம்பரசன் உள்ளிட்ட நான்கு பேர் சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் புகுந்து தாமோதரன் மற்றும் யோகேஸ்வரனை நாற்காலியால் சரமாரியாகத் தாக்கினர்.மேலும், தாமோதரனின் கார் கண்ணாடியையும் உடைத்துள்ளனர்.

 

இதுகுறித்து சார்பதிவாளர் லிங்கேஸ்வரன் மற்றும் தாமோதரன் ஆகியோர் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

புகாரின் பேரில் கோபி, லட்சுமணன், ராஜசேகர், சிலம்பரசன் ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

இதனைத் தொடர்ந்து கோபி மற்றும் சிலம்பரசன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக உள்ள லட்சுமணன், ராஜசேகர் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.சார்பதிவாளர் அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து இருவரைத் தாக்கி, கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்