வெள்ளி, 06 November 2026
⚡ சமீபத்திய
வாணியம்பாடியில் மின்சாரம் தாக்கி வெளிநாட்டு தொழிலாளி பலி – இரும்புக் கம்பியால் கழிவுநீர் அடைப்பைச் சரிசெய்ய முயன்றபோது சோகம்! ஓசூர் அருகே தனியார் தொழிற்சாலையில் கான்கிரீட் ஆர்ச் சரிந்து விபத்து – 3 தொழிலாளர்கள் பலி! திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் – சகோதரர் உட்பட 2 பேர் கைது! வாணியம்பாடி அருகே இடி, மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி – பெண் படுகாயம்! ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ரூ.1.75 கோடி வளர்ச்சிப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு பெருந்துறை நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பிய முதல்வர் விஜய் – கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு! ஆம்பூரில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து கௌரவிப்பு! சிங்கிள்ஸுக்கு இலவசமாக பின்லாந்து சுற்றுலா! காதல் விருந்துக்கு 16 பேருக்கு அழைப்பு – நவம்பர் 10 கடைசி நாள்! வாணியம்பாடி அருகே கல்லறைத் திருநாள் – கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு! ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு வாணியம்பாடியில் மின்சாரம் தாக்கி வெளிநாட்டு தொழிலாளி பலி – இரும்புக் கம்பியால் கழிவுநீர் அடைப்பைச் சரிசெய்ய முயன்றபோது சோகம்! ஓசூர் அருகே தனியார் தொழிற்சாலையில் கான்கிரீட் ஆர்ச் சரிந்து விபத்து – 3 தொழிலாளர்கள் பலி! திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் – சகோதரர் உட்பட 2 பேர் கைது! வாணியம்பாடி அருகே இடி, மின்னல் தாக்கி 7 ஆடுகள் பலி – பெண் படுகாயம்! ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ரூ.1.75 கோடி வளர்ச்சிப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு பெருந்துறை நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பிய முதல்வர் விஜய் – கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு! ஆம்பூரில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்து கௌரவிப்பு! சிங்கிள்ஸுக்கு இலவசமாக பின்லாந்து சுற்றுலா! காதல் விருந்துக்கு 16 பேருக்கு அழைப்பு – நவம்பர் 10 கடைசி நாள்! வாணியம்பாடி அருகே கல்லறைத் திருநாள் – கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு! ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு
மாவட்ட செய்திகள்

வாணியம்பாடியில் மின்சாரம் தாக்கி வெளிநாட்டு தொழிலாளி பலி – இரும்புக் கம்பியால் கழிவுநீர் அடைப்பைச் சரிசெய்ய முயன்றபோது சோகம்!

06 நவம்பர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 25 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
வாணியம்பாடியில் மின்சாரம் தாக்கி வெளிநாட்டு தொழிலாளி பலி – இரும்புக் கம்பியால் கழிவுநீர் அடைப்பைச் சரிசெய்ய முயன்றபோது சோகம்!

வாணியம்பாடியில் வீட்டின் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி வெளிநாட்டு தொழிலாளி பலி!

 

வாணியம்பாடி, நவ.6- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட ராமாயண தோப்பு, வி.எஸ். விஸ்வநாதன் தெருவில், வீட்டின் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி பையாஸ் அஹ்மத் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பையாஸ் அஹ்மத், இவர் சவூதி அரேபியாவில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மூன்று மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இவர், கடந்த இரண்டு மாதங்களாக மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பெரியாங்குப்பம் கிராமத்தில் தங்கி இருந்தார்.

இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு வாணியம்பாடி ராமாயண தோப்பு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்த அவர், பெற்றோருடன் தங்கியிருந்தார்.இன்று தாய் வீட்டின் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்வதற்காக நீளமான இரும்புக் கம்பியைப் பயன்படுத்தி முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தக் கம்பி வீட்டின் அருகே சென்றுகொண்டிருந்த உயர் மின்னழுத்த மின்கம்பியில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து பையாஸ் அஹ்மத் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அவரது அலறல் சத்தம் மற்றும் சம்பவத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் உடனடியாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர போலீசார், உயிரிழந்த பையாஸ் அஹ்மத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த வெளிநாட்டு தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்