ஆம்பூர் அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்த கார் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது
ஆம்பூர் அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்த கார் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!
நவ.6- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மைனர் பெண்ணைத் திருமணம் செய்த கார் ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல் போனதாக, அவரது பெற்றோர் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.விசாரணையில், காணாமல் போன சிறுமி, வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாரின் மகனும், கார் ஓட்டுநருமான விஸ்வா என்பவரைத் திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியைத் திருமணம் செய்த விஸ்வா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஆம்பூர் அருகே மைனர் பெண்ணைத் திருமணம் செய்த கார் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
