வாணியம்பாடி அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்ய எடுத்துச் சென்ற 107 மதுபாட்டில்கள் பறிமுதல்.ஒருவர் கைது!
வாணியம்பாடி அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்ய எடுத்துச் சென்ற 107 மதுபாட்டில்கள் பறிமுதல்.ஒருவர் கைது!
வாணியம்பாடி, அக்.21- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பலூர் அருகே கே.கே. நகர் சந்திப்பில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளரின் தனிப்படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை எடுத்துச் சென்ற தும்பேரி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் (38) என்பவரைத் தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.விசாரணையில், புதுக்கோயில் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டில்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக அவர் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடமிருந்த 107 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், பாண்டியனைக் கைது செய்து ஆம்பலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
