புதன், 28 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! திருப்பத்தூரில் WCM யாக்ஷினிக்கு பிரம்மாண்ட வரவேற்பு! இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை! கிருஷ்ணகிரியில் நேருக்கு நேர் மோதிய பைக்குகள் தீப்பிடித்து எரிந்தன – 2 பேர் உடல் கருகி பலி! வாணியம்பாடி கோட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியு கந்திலி அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்! நோய்த்தொற்று அபாயத்தால் பொதுமக்கள் அவதி. வாணியம்பாடி நகராட்சி அலுவலக நுழைவாயிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி தர்ணா! திருப்பத்தூர் ராமகிருஷ்ணா பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி – ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்! வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து – 18 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி! பேருந்தை பறிமுதல் செய்து கிராமிய போலீசார் விசாரணை. திண்டிவனம் அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி… உடலை ஏரியில் வீசிய விவசாயி கைது! ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்! சுற்றுலாப் பயணிகள் உற்சாகம். திருப்பத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! திருப்பத்தூரில் WCM யாக்ஷினிக்கு பிரம்மாண்ட வரவேற்பு! இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை! கிருஷ்ணகிரியில் நேருக்கு நேர் மோதிய பைக்குகள் தீப்பிடித்து எரிந்தன – 2 பேர் உடல் கருகி பலி! வாணியம்பாடி கோட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியு கந்திலி அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்! நோய்த்தொற்று அபாயத்தால் பொதுமக்கள் அவதி. வாணியம்பாடி நகராட்சி அலுவலக நுழைவாயிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி தர்ணா! திருப்பத்தூர் ராமகிருஷ்ணா பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி – ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்! வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து – 18 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி! பேருந்தை பறிமுதல் செய்து கிராமிய போலீசார் விசாரணை. திண்டிவனம் அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி… உடலை ஏரியில் வீசிய விவசாயி கைது! ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்! சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்.
விவசாயம், மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

28 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 0 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
திருப்பத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருப்பத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

 

அக்.28- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஏழராம்பட்டி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது, மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் மற்றும் உணவு தயாரிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

 

தொடர்ந்து, ஏழராம்பட்டி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வட்டார நாற்றங்கால் பண்ணையைப் பார்வையிட்டார். அங்கு கொய்யா, மா உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்படுவதை ஆய்வு செய்தார். மரக்கன்றுகளை உரிய உயரம் மற்றும் தரத்துடன் வளர்ப்பதற்கும், போதிய இடைவெளியில் முறையாகப் பராமரிப்பதற்கும், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி செடிகளை வளர்ப்பதற்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

இதனைத் தொடர்ந்து, அங்கே அமைக்கப்பட்டுள்ள மண்புழு உரக்கூடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள், உரக்கூடத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், இயற்கை உரமான மண்புழு உரம் தயாரிப்பை அதிகரிப்பதுடன், அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தமிழரசி மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்