சிங்கிள்ஸுக்கு இலவசமாக பின்லாந்து சுற்றுலா! காதல் விருந்துக்கு 16 பேருக்கு அழைப்பு – நவம்பர் 10 கடைசி நாள்!
SINGLES-க்கு இலவசமாக பின்லாந்து சுற்றுலா! காதல் மலருமா? உணவு விருந்தில் புதிய உறவுகள்!
தனிமையில் இருப்பவர்களுக்கு இலவசப் பயணம்! பின்லாந்தின் சுற்றுலாத் துறையான Visit Finland, உலகம் முழுவதிலுமிருந்து 16 தனிநபர்களைத் தேர்ந்தெடுத்து நான்கு நாள் சுற்றுலாவுக்கு அழைக்கிறது. இந்தத் திட்டத்திற்கு ‘Finnish Dinner Date’ என்று பெயரிட்டுள்ளது.
விமானப் பயணம் முதல் தங்குமிடம் வரை இலவசம்! தேர்ந்தெடுக்கப்படும் 16 பேரும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படுவார்கள். ஒரு குழு ஹெல்சிங்கிக்கும், மற்றொரு குழு டாம்பேரே நகருக்கும் அழைத்துச் செல்லப்படும். விமானக் கட்டணம், தங்குமிடம், உணவு உள்ளிட்ட செலவுகளை ஏற்பாட்டாளர்களே ஏற்றுக்கொள்கிறார்கள்.
உணவு விருந்தில் மலருமா காதல்? ஒவ்வொரு குழுவிலும் உள்ள எட்டு வெளிநாட்டுப் பயணிகளுடன், இரண்டு உள்ளூர் பின்லாந்து நாட்டவர்களும் விருந்தில் கலந்துகொள்வார்கள். பாரம்பரிய உணவுகளுடன் நடைபெறும் இந்தச் சந்திப்பில் புதிய நட்போ காதலோ உருவாகலாம். ஆனால் காதல் மலரும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.
ஒரு காணொளி பதிவு செய்தால் போதும்! விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆங்கிலத்தில் ஒரு சிறிய காணொளியைப் பதிவுசெய்ய வேண்டும். அதில், “ஒரு காதல் விருந்துக்கு நீங்கள் என்ன உணவு பரிமாறுவீர்கள்? ஏன் அந்த உணவைத் தேர்ந்தெடுப்பீர்கள்?” என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும். அந்தக் காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
நவம்பர் 10 கடைசி நாள்! விண்ணப்பங்கள் நவம்பர் 10, 2026 வரை ஏற்றுக்கொள்ளப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் டிசம்பர் 1ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள். 2027 பிப்ரவரி 9 முதல் 19ஆம் தேதிக்குள் இந்த நான்கு நாள் பயணங்கள் நடைபெற உள்ளன.
