ஆம்பூர் அருகே 6 வாரங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து நூறுநாள் பணியாளர்கள் சாலை அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம்.
ஆம்பூர் அருகே 6 வாரங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து நூறுநாள் பணியாளர்கள் சாலை அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம்.
நவ.1- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்டோர் நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில், பணியாளர்களில் பலருக்கு முறையாக ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கடந்த 6 வாரங்களாக ஊதியம் வழங்கப்படாததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, உரிய அளிக்காததால் பணியாளர்கள் வாணியம்பாடி - குடியாத்தம் சாலையில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் மற்றும் உமராபாத் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, ஊதியம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பணியாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் வாணியம்பாடி - குடியாத்தம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
