சனி, 31 October 2026
⚡ சமீபத்திய
பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் அளித்த தகவலால் கள்ளநோட்டு கும்பல் சிக்கியது! வாணியம்பாடி அருகே மருத்துவம் படிக்காமல் கருக்கலைப்பு செய்ய வந்த 2 பெண்கள் கைது! திருப்பத்தூரில் குழந்தைகள் பாதுகாப்புப் பயிற்சி: கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு ஆட்சியர் அறிவுரை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகனைப் பராமரிக்க மருத்துவ விடுப்பு எடுத்த தந்தைக்கு பணிமனையில் நெருக்கடி? சென்னையில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ஆம்பூரில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! கடையநல்லூர் அருகே மனித–வனவிலங்கு மோதலைத் தடுக்க சிறப்பு ஒத்திகைப் பயிற்சி! சென்னையிலிருந்து வந்த அதிரடிப்படை கமாண்டோக்கள் வனத்துறையினருக்குப் பயிற்சி ஆம்பூரில் அனுமதியின்றி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை. ஆம்பூர் அருகே 150 ஆண்டுகால பழமையான அம்மன் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு – கோவில் வளாகத்தில் கிராம மக்கள் போராட்டம்! திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 பயனாளிகளுக்கு 2 கோடியே 21 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் உதவி – மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! ஆம்பூரில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி சேதம்! வாகனத்தைச் சரிசெய்து தரக்கோரி ஓட்டுநருடன் வாலிபர் வாக்குவாதம் – 20 நிமிடங்கள் பயணிகள் அவதி! பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் அளித்த தகவலால் கள்ளநோட்டு கும்பல் சிக்கியது! வாணியம்பாடி அருகே மருத்துவம் படிக்காமல் கருக்கலைப்பு செய்ய வந்த 2 பெண்கள் கைது! திருப்பத்தூரில் குழந்தைகள் பாதுகாப்புப் பயிற்சி: கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு ஆட்சியர் அறிவுரை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகனைப் பராமரிக்க மருத்துவ விடுப்பு எடுத்த தந்தைக்கு பணிமனையில் நெருக்கடி? சென்னையில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ஆம்பூரில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! கடையநல்லூர் அருகே மனித–வனவிலங்கு மோதலைத் தடுக்க சிறப்பு ஒத்திகைப் பயிற்சி! சென்னையிலிருந்து வந்த அதிரடிப்படை கமாண்டோக்கள் வனத்துறையினருக்குப் பயிற்சி ஆம்பூரில் அனுமதியின்றி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை. ஆம்பூர் அருகே 150 ஆண்டுகால பழமையான அம்மன் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு – கோவில் வளாகத்தில் கிராம மக்கள் போராட்டம்! திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 பயனாளிகளுக்கு 2 கோடியே 21 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் உதவி – மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! ஆம்பூரில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி சேதம்! வாகனத்தைச் சரிசெய்து தரக்கோரி ஓட்டுநருடன் வாலிபர் வாக்குவாதம் – 20 நிமிடங்கள் பயணிகள் அவதி!
மாவட்ட செய்திகள், தமிழக செய்திகள்

பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் அளித்த தகவலால் கள்ளநோட்டு கும்பல் சிக்கியது!

31 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 4 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா

பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் அளித்த தகவலால் கள்ளநோட்டு கும்பல் சிக்கியது!

மேற்கு வங்கத்திலிருந்து கள்ளநோட்டுகளை வாங்கி குடியாத்தம், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் புழக்கத்தில் விட்டதாக 5 பேர் கைது – ரூ.1.50 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்.

குடியாத்தம் அக்.31- வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் அளித்த தகவலின் அடிப்படையில், கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.குடியாத்தம் அடுத்த கள்ளூர் நேரு நகரைச் சேர்ந்த 46 வயதான ரபீக் அஹ்மத், தரணம்பேட்டை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.இவர் சில தினங்களுக்கு முன்பு பிளிப்கார்ட் மூலம் பொருள் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பொருளை டெலிவரி செய்தபோது, ஊழியரிடம் 500 ரூபாய் நோட்டுகள் இரண்டைக் கொடுத்துள்ளார். அந்த நோட்டுகள் மீது சந்தேகமடைந்த டெலிவரி ஊழியர், குடியாத்தம் போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, வேலூர் சரக டிஐஜி மகேஷ் உத்தரவின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் மேற்பார்வையில், குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.இதில், ரபீக் அஹ்மத்திடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குடியாத்தம் தங்கம் நகர் பாரதியார் தெருவைச் சேர்ந்த 52 வயதான ஜூபேர் அஹ்மத் என்பவரிடம் கள்ளநோட்டுகளை வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, ஜூபேர் அஹ்மத் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையத்தைச் சேர்ந்த 47 வயதான கோபால், பேரணாம்பட்டு அடுத்த டி.டி.மோட்டூர் அண்ணா நகரைச் சேர்ந்த 48 வயதான காமராஜ் ஆகியோர் கள்ளநோட்டுகளை வழங்கியதாகத் தெரியவந்தது.இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து, கோபால் மற்றும் காமராஜிடம் நடத்திய விசாரணையில், ஆம்பூர் எஸ்.கே.ரோடு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 65 வயதான பாபு என்பவர் கள்ளநோட்டுகளை வழங்கியதாகத் தெரியவந்தது.இதையடுத்து, பாபுவைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.பாபுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தில் கள்ளநோட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.மேலும், மேற்கு வங்கத்துக்குச் சென்று வந்தபோது அங்குள்ள கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டு, அவர்களிடமிருந்து கள்ளநோட்டுகளை வாங்கி வந்து குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் புழக்கத்தில் விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, மேற்கு வங்கத்தில் பாபுவுக்கு கள்ளநோட்டுகளை விநியோகம் செய்தவர்கள் யார் என்பது குறித்து குடியாத்தம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வழக்கில் ரபீக் அகமது, ஜூபேர் அகமது, கோபால், காமராஜ், பாபு ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் அளித்த தகவலின் அடிப்படையில், கள்ளநோட்டு புழக்கத்தில் ஈடுபட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கள்ளநோட்டு புழக்கம் வேறு பகுதிகளிலும் உள்ளதா?குடியாத்தம், ஆம்பூர், பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்தக் கும்பலுக்கு வேறு பகுதிகளில் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.குறிப்பாக, மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கள்ளநோட்டுகள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன, அவற்றை விநியோகம் செய்தவர்கள் யார், வேலூர் மற்றும் பிற மாவட்டங்களில் இவை புழக்கத்தில் விடப்பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணை விரிவுபடுத்தப்பட வேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.எனினும், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளநோட்டுகள் பரவலாகப் புழக்கத்தில் இருப்பதாக வெளியாகும் தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களுக்கும் வேறு நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது போலீஸ் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.

 

கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வழக்கில், மேற்கு வங்கத்தில் உள்ள விநியோகஸ்தர்களைக் கண்டறிய போலீசார் மேற்கொண்டு வரும் விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்