வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி தமுமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி தமுமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்.
வாணியம்பாடி, நவ.1- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 32-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தமுமுக மாவட்டச் செயலாளர் வர்தா அப்துல் சுகூர் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கலீல் அஹ்மத், மாவட்டப் பொருளாளர் சுல்தான் அஹ்மத், மாவட்ட துணைச் செயலாளர் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியை நகர தலைவர் கதீப் கயாஸ் அஹ்மத் ஒருங்கிணைத்தார். முடிவில் தமுமுக நகர மருத்துவ அணிச் செயலாளர் முஹம்மத் அஸ்ஹான் நன்றி கூறினார்.
