வாணியம்பாடியில் தமுமுக – மமக நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
வாணியம்பாடியில் தமுமுக – மமக நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
வாணியம்பாடி, அக்.6- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமுமுக – மமக வாணியம்பாடி நகர தலைவர் கதீப் கயாஸ் அஹ்மத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட தலைவர் வி.ஆர். நசீர் அஹமத், தமுமுக மாவட்ட செயலாளர் வர்தா அப்துல் ஷுக்கூர், மமக மாவட்ட செயலாளர் கலீல் பாஷா, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் இம்ரான், மாவட்ட துணைச் செயலாளர்கள் பி. முஹம்மத் அனீஸ் எம்.சி., சித்தீக் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நகர அளவில் இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி, விளையாட்டு அணி, மனிதவள மேம்பாட்டு அணி மற்றும் ஐ.டி.–ஊடக அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
மேலும், தமுமுகவின் சமூகப் பணிகளால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் தமுமுகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக, நகர விளையாட்டு அணி நிர்வாகிகளுக்கு தமுமுக சார்பில் டி-ஷர்ட்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜெர்சிகள் வழங்கப்பட்டன.
