மாவட்ட செய்திகள், தமிழக செய்திகள்
வாணியம்பாடியில் 20 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது – நகர போலீசார் நடவடிக்கை!
அக்டோபர் -23 திருப்பத்தூர் மாவட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடில்லி பகுதியில் நகர போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில்
வந்த கட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜெகன் (23) என்பவரிடம் சோதனை மேற்கொண்ட போது அவரிடம் 20 கிராம் கஞ்சா இருப்பதை கண்டு பிடித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
