அம்பலூர் சிறுவர் பூங்காவில் ஆட்சியர் ஆய்வு – அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.
அம்பலூர் சிறுவர் பூங்காவில் ஆட்சியர் ஆய்வு – அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.
அக்.8- திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் ஊராட்சியில் உள்ள சிறுவர் பூங்காவை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பூங்காவில் குடிநீர் வசதி, மின் விளக்குகள், தூய்மைப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியர், அவற்றை முறையாக பராமரித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கோபி, வட்டாட்சியர் ஜெகதீசன், அம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.பி.முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் சத்திராஜா செந்தில்குமார், பி.ராஜ்குமார், எம்.பாபு, அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
