மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் பதிவேடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் பதிவேடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.
அக்.19- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்த அவர், காவல்துறையினர் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரைகளை வழங்கினார்.
மேலும், பொதுமக்களிடம் மரியாதையுடனும், பொறுப்புடனும் நடந்து கொண்டு, அவர்களின் குறைகளை உரிய முறையில் அணுக வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
