வாணியம்பாடி அருகே வேகமாகச் சென்ற காரின் மேல் அமர்ந்து பயணித்த குரங்கு!பின்னால் வந்த கனரக வாகனங்களைக் கண்டும் அச்சமின்றி பயணம் – வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!
வாணியம்பாடி அருகே வேகமாகச் சென்ற காரின் மேல் அமர்ந்து பயணித்த குரங்கு!பின்னால் வந்த கனரக வாகனங்களைக் கண்டும் அச்சமின்றி பயணம் – வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!
வாணியம்பாடி, அக்.28- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி வழியாக, கிருஷ்ணகிரியிலிருந்து வேலூர் நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது.அப்போது, சிறிய குரங்கு ஒன்று திடீரென காரின் மேல் பகுதியில் ஏறி அமர்ந்துகொண்டது. பின்னால் பெரிய கன்டெய்னர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வந்துகொண்டிருந்த நிலையிலும், எவ்வித அச்சமுமின்றி அந்தக் குரங்கு காரின் மேல் அமர்ந்தபடியே பயணித்தது.இதைக் கண்ட சக வாகன ஓட்டிகள், ஆச்சரியமடைந்து தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.இதற்கிடையே, சுங்கச்சாவடி வழியாகச் சென்றபோது காரின் மேல் குரங்கு அமர்ந்திருப்பதைப் பார்த்த வாகன ஓட்டிகளும் அங்கிருந்தவர்களும் ஆச்சரியத்துடன் காரைப் பார்த்தனர்.இதையடுத்து, காரை நிறுத்திப் பார்த்த ஓட்டுநருக்கு, அதன் மேல் பகுதியில் குரங்கு அமர்ந்திருப்பது தெரியவந்தது.தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற காரின் மேல் குரங்கு அமர்ந்து பயணித்த இந்த வினோதக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
